விழுப்புரம்

மரக்காணத்தில் 45 மி.மீ. மழை

7th Oct 2022 02:46 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மரக்காணத்தில் 45 மி.மீ. மழை பதிவானது.

ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மழை பெய்தது. வியாழக்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மரக்காணத்தில் 45 மி.மீ. மழை பதிவானது. இதேபோல, திண்டிவனத்தில் 17, வானூரில் 8, அனந்தபுரத்தில் 2, விழுப்புரத்தில் ஒரு மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் மொத்தம் 73 மி.மீ. மழையும், சராசரியாக 3.48 மி.மீ. மழையும் பதிவானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT