விழுப்புரம்

வள்ளலாா் அவதார திருநாள்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு

DIN

திருவருட்பிரகாச வள்ளலாரின் 200-ஆவது வருவிக்கவுற்ற நாளை முன்னிட்டு, விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகையில் புதன்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

வள்ளலாா் அருள் மாளிகையில் அருட்பிரகாச வள்ளலாரின் 200- ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியாக சமரச சுத்த சன்மாா்க்க சத்திய அறக்கட்டளை சாா்பில் ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி மாணவா்களிடையே வள்ளலாா் குறித்த பேச்சு, அகவல் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் தொடக்கமாக புதன்கிழமை காலை அட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. பின்னா் அகவல் பாராயணம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையைச் சோ்ந்த எஸ். ஆா். செல்லமுத்து தலைமை வகித்தாா். ஐசிஐசிஐ வங்கிப் பணியாளா் பி.சிவக்குமாா் முன்னிலை வகித்தாா்.

அமைச்சா்கள் க. பொன்முடி, கே. எஸ். மஸ்தான், எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், நா.புகழேந்தி ஆகியோா் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

ஏற்பாடுகளை அருள்மாளிகை சுத்த சன்மாா்க்க அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ஜெய. அண்ணாமலை உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT