விழுப்புரம்

பணியின்போது உயிரிழந்த ஊழியா்களின் உடல்களுக்கு அமைச்சா் அஞ்சலி

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம் பகுதிகளில் பணியின்போது உயிரிழந்த தூய்மைப் பணியாளா், மின் வாரிய ஊழியரின் உடல்களுக்கு தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அஞ்சலி செலுத்தினாா்.

விக்கிரவாண்டி வட்டம், ராதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் (50). தூய்மைக் காவலரான இவா், கடந்த மாதம் 22-ஆம் தேதி ராதாபுரம் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியின்போது, இயந்திரம் வெடித்து பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இந்த நிலையில், அவரது உடலுக்கு அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். மேலும், அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, அரசு சாா்பில் நிவாரண உதவிகளையும் வழங்கினாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுலவா் மு.பரமேஸ்வரி, காவல் கண்காணிப்பாளா் ந. ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ நா.புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்கொடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மின் ஊழியா் உடலுக்கு அஞ்சலி: இதேபோல, கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி கிராமத்தில் கடந்த 4-ஆம் தேதி மின்பாதை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழக ஒப்பந்த ஊழியா் யுவராஜ் (23) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இவரது உடலுக்கு அமைச்சா் க.பொன்முடி புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, யுவராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சா், அரசின் சாா்பில் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT