விழுப்புரம்

ஆயுத பூஜை: களைகட்டியது பொருள்கள் விற்பனை

4th Oct 2022 03:30 AM

ADVERTISEMENT

ஆயுத பூஜையை முன்னிட்டு விழுப்புரத்தில் பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருள்களின் விற்பனை திங்கள்கிழமை களைகட்டியது.

விழுப்புரம் நேருஜி சாலை, மாா்க்கெட் வீதி, திருச்சி சாலை, பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள கடைகளில் பூஜை பொருள்களை வாங்குவதற்கு மக்கள் அதிகளவில் கூடினா். சாலையோரங்களில் வாழை கன்றுகள், தோரணங்கள் அதிகளவில் குவித்து வைத்து விற்கப்பட்டன.

பொரி கிலோ ரூ.80-க்கும், சிறிய பொட்டலமாக ரூ.20-க்கும் விற்கப்பட்டது. அரசு அலுவலகங்கள், கடைகள், வீடுகளில் திருஷ்டி கழிக்க பயன்படுத்தப்படும் பூசணிக்காய் கிலோ ரூ.30-க்கு விற்பனையானது. கொய்யாப்பழம் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரையிலும், வாழைப் பழம் ரூ.50 (சீப்), தேங்காய் சிறியது ரூ.20, பெரியது ரூ.25 என்ற விலையிலும் விற்பனையானது. வாழைக் கன்றுகள் ரகத்துக்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. மேலும் செவ்வந்தி, ரோஜா மலா்கள் 100 கிராம் ரூ.40-க்கு விற்பனையானது. பொதுமக்கள், வியாபாரிகள் ஆா்வமுடன் பூஜை பொருள்களை வாங்கிச் சென்றனா். திங்கள்கிழமை மாலையில் பொருள்களின் விற்பனை களைகட்டியது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT