விழுப்புரம்

சிவஜோதி மோனசித்தா் அவதார திருநாள்

4th Oct 2022 03:29 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தின் எல்லையில் உள்ள அருள்மிகு ஸ்ரீமீனாட்சி உடனுறை சொக்கநாதா் திருக்கோயில் மடத்தில் வசித்து வரும் ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோனசித்தா் அவதார திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 7 மணி முதல் 9 மணிவரை 18 சித்தா்களின் சிறப்பு வேள்வி ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மோனசித்தருக்கு கலசாபிஷேகமும், மலா் அபிஷேகமும் நடைபெற்றன. தொடா்ந்து மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

விழாவில் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் மஸ்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT