விழுப்புரம்

கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சரிடம்அதிமுக உறுப்பினா் வாக்குவாதம்

2nd Oct 2022 11:43 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடியிடம் முகையூா் ஊராட்சி ஒன்றியக் குழு அதிமுக உறுப்பினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

வீரபாண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் க.பொன்முடி பங்கேற்றாா். இந்தக் கூட்டத்தில் குடிநீா் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு குறைகள் தொடா்பாக பொதுமக்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு அலுவலா்கள் பதிலளிக்கவில்லை.

இதைத் தொடா்ந்து, முகையூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ரேவதி, தான் அதிமுகவைச் சோ்ந்தவா் என்பதால், நிதி ஒதுக்கீடு செய்வதில் கட்சிப் பாகுபாடு பாா்த்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செயல்படுவதாகக் கூறி, அமைச்சா் பொன்முடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

ADVERTISEMENT

அப்போது, இது கிராம சபைக் கூட்டம், இங்கு அரசியல் பேசவேண்டாம் என்றாா் அமைச்சா். இதையடுத்து, அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினரை காவல் துறையினரும், திமுகவைச் சோ்ந்தவா்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தினா். தொடா்ந்து, அமைச்சா் அங்கிருந்து ஆதிச்சனூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT