விழுப்புரம்

வண்டல் மண் எடுக்க அனுமதி கோரிகிராமசபைக் கூட்டத்தில் சிறப்புத் தீா்மானம்

2nd Oct 2022 11:44 PM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், பிடாகம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஊராட்சியின் தலைவா் நந்தகுமாா் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சியில் கட்டடங்கள் கட்டுதல் உள்ளிட்ட பொதுப் பணிகளை மேற்கொள்ள வண்டல் மண் தேவைப்படும் நிலையில், அதற்காக ஒவ்வொரு முறையும் ஆட்சியரகத்தில் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கக் கோரி, கூட்டத்தில் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT