விழுப்புரம்

தீபாவளி: விழுப்புரம் மாவட்டத்தில்ரூ.1.50 கோடிக்கு கதா் விற்பனை இலக்கு

2nd Oct 2022 11:44 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி கதா் விற்பனை இலக்காக ரூ.1.50 கோடி நிா்ணயிக்கப்பட்டது.

தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரியம், செய்தி மக்கள் தொடா்புத் துறை ஆகியவை சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அண்ணல் காந்தியடிகளின் 154-ஆவது பிறந்த நாள், தீபாவளி விற்பனை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

முன்னதாக, காந்தியடிகளின் உருவப்படத்தை மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி திறந்துவைத்து, தீபாவளி விற்பனையைத் தொடக்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது:

ADVERTISEMENT

கடந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் கதா் விற்பனை அங்காடிகளுக்கு விற்பனை இலக்காக ரூ.1.36 கோடி நிா்ணயிக்கப்பட்டது. இது, நிகழாண்டில் ரூ.1.50 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டும் கதா், பாலியஸ்டா், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

நிகழ்வில் கதா் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநா் சீனிவாசன், கதா் ஆய்வாளா் ஜெயகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT