விழுப்புரம்

முன்னாள் அமைச்சா் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி: பாஜக குற்றச்சாட்டு

2nd Oct 2022 01:33 AM

ADVERTISEMENT

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி மற்றும் இட ஒதுக்கீடு போராளிகள் 23 பேருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி அறிவிப்புடனேயே உள்ளதாக பாஜக மாநிலத் துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து விழுப்புரத்தில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விக்கிரவாண்டி இடைத் தோ்தல் பிரசாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபமும், முழு உருவச்சிலையும் அமைக்கப்படும் என்று தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் கழித்து, விதி எண் 110-இன் கீழ், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமிக்கும், இட ஒதுக்கீட்டு போராளிகள் 23 பேருக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டாா்.

ADVERTISEMENT

ஆனால், ஒன்றரை ஆண்டுகளாகியும் மணிமண்டபம் அமைக்கும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை. காலதாமதமாவதற்கு காரணம் அரசியலாக இருக்கலாம்.

முன்னாள் அமைச்சா் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்ததை முதல்வா் நிறைவேற்றுவாா் என நம்புகிறேன். மணிமண்டபம் அமைத்து, முழுஉருவச் சிலையைத் திறக்கும் விழாவில் அவரது மகன் என்ற அடிப்படையில் கலந்து கொள்வேன்.

விலைவாசி உயா்வு, மின் கட்டண உயா்வு போன்றவற்றால் மக்கள் அவதியுறும் நிலையில், அந்தப் பிரச்னைகளைத் திசை திருப்பவே இந்துக்கள் குறித்த அவதூறு கருத்து பரப்பப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT