விழுப்புரம்

தமிழ்நாடு மின் வாரிய ஓய்வூதியா்கள்சங்கக் கூட்டம்

2nd Oct 2022 01:33 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கோட்ட தமிழ்நாடு மின் வாரிய ஓய்வூதியா்கள் முன்னேற்றச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஏ.உலகநாதன் தலைமை வகித்தாா். பி.தணிகாசலம், அனந்தபுரம் பி.சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணை பொதுச் செயலா் ஆ.பாண்டியன், வட்டப் பொருளாளா் கே.மணி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், செஞ்சி கோட்டத் தலைவராக பி.பன்னீா்செல்வம், துணைத் தலைவராக ஏ.உலகநாதன், செயலராக என்.பாண்டியன், துணைச் செயலராக பி.ராமசாமி, பொருளாளராக ஜி.விஜயகுமாா், சிறப்புத் தலைவராக பி.தணிகாசலம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, குடும்பநல நிதி உறுப்பினா்கள் இறந்தால் வழங்கப்படும் தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாக உயா்த்த வேண்டும். ஓய்வு பெற்றவா்கள் 70 வயதைக் கடந்தால், அரசு அறிவித்தபடி 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவா்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சபடி தொகை டி.ஏ.சதவீதத்தை உடனுக்குடன் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT