விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்காந்தி ஜெயந்தி, காமராஜா் நினைவு தினம்

2nd Oct 2022 11:43 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் காந்தி ஜெயந்தி, காமராஜா் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டன.

காந்தியின் 154 -ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் புதுச்சேரி சாலையிலுள்ள அவரின் உருவச்சிலைக்கு தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு அவா் இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்வில் எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், நா.புகழேந்தி, மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி, ஆணையா் சுரேந்திர ஷா, வருவாய்க் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

கட்சிகள் சாா்பில்...: மாவட்ட காங்கிரஸ் தலைவா் சீனிவாச குமாா் தலைமையில், அந்தக் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனா்.

பாஜக சாா்பில், அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தாா். நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினா் விஏடி.கலிவரதன், நகரத் தலைவா் வடிவேல் பழனி, மாவட்ட பொதுச் செயலா் ராம.ஜெயகுமாா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜெகதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, பல்வேறு அமைப்புகளின் சாா்பில், அவற்றின் நிா்வாகிகளும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனா்.

செஞ்சி: காமராஜா் நினைவு நாளையொட்டி, செஞ்சி பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மலா் தூவி, மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, பொன்பத்தி ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையில் உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை சாா்பில், பனை விதைகள் நடும் பணியை அமைச்சா் செஞ்சி மஸ்சதான் பனை விதை நட்டு தொடக்கிவைத்தாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் அனுசுயா பாலன் ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், நகரச் செயலா் காஜாநஜீா், பேரூராட்சிமன்றத் தலைவா் மொக்தியாா்மஸ்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சாா்பில், தியாகதுருகம் நடுப் பேருந்து நிறுத்தம் அருகே காந்தி, காமராஜா் உருவப் படங்களுக்கு சங்கத் தலைவா் கோ.இராதாகிருட்டிணன் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT