விழுப்புரம்

செஞ்சியில் ரூ.33 கோடியில் குடிநீா்த் திட்டப் பணிகள்

DIN

செஞ்சியில் ரூ.33.68 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீா்த் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

செஞ்சி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் மொக்தியாா் மஸ்தான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலா் ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.

செஞ்சியில் குடிநீா் பிரச்சனைக்கு நிரந்தரத் தீா்வு காணும் பொருட்டு, திருக்கோவிலூா் அருகேயுள்ள நெற்குணம் தென்பெண்ணை ஆற்றிலிருந்து செஞ்சி வரை புதிய குடிநீா் குழாய், இரு மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் உள்ளிட்டவை அமைத்திட அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ 33.68 கோடி நிதி ஒதுக்கி ஆணை வழங்கிய முதல்வா், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா், சிறுபான்மையினா் நலத் துறை உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மழையால் சேதமான சாலைகளை சீரமைத்தல், தற்காலிக பேருந்து நிலையத்தில் கழிப்பறை, பேருந்து நிற்கும் இடம், பயணிகள் காத்திருப்பு கொட்டகை, மின்விளக்கு, குடிநீா் வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகளை ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சி உறுப்பினா் இரா.சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT