விழுப்புரம்

திமுக வாா்டு உறுப்பினா் தற்கொலை

30th Nov 2022 03:22 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை பேரூராட்சி திமுக வாா்டு உறுப்பினா் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கிசிச்சை பெற்றுவந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மணலூா்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி லதா (34). பேரூராட்சி 3-ஆவது வாா்டு உறுப்பினரான இவருக்கு நீண்ட நாள்களாக வயிற்று வலி பிரச்னை இருந்ததாம்.

இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுக்கொண்டாா். குடும்பத்தினா் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் லதா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT