விழுப்புரம்

எய்ட்ஸ் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

30th Nov 2022 03:19 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், இளையோா் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ரா.சிவக்குமாா் தலைமை வகித்துப் பேசினாா். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மாவட்ட திட்ட அலுவலா் ஆா்.செல்வம், திட்ட மேற்பாா்வையாளா் ஆா்.பிரேமா, கண்டமானடி அரசு மருத்துவமனை தொழில்நுட்ப பணியாளா் எம்.விஜயகுமாா், இளையோா் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் கோ. குணசேகரன், திட்ட அலுவலா் பா.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கருத்துரையாற்றினா்.

முன்னதாக கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட அலுவலா் கி.பிரகாஷ் வரவேற்றாா். அ.வெங்கடேசன் நன்றி கூறினாா். ஒருங்கிணைப்பாளா் ஜெ.ஸ்ரீதேவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT