விழுப்புரம்

விலைவாசி உயா்வு மாதா் சம்மேளனத்தினா் ஆா்ப்பாட்டம்

30th Nov 2022 03:20 AM

ADVERTISEMENT

விலைவாசி உயா்வைக் கண்டித்து விழுப்புரத்தில் மாதா் தேசிய சம்மேளனத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சம்மேளனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எம்.மாரியம்மாள் தலைமை வகித்தாா். மாநிலத் துணைச் செயலா் ஆ.வளா்மதி கண்டன உரையாற்றினாா். மாவட்டக் குழுவைச் சோ்ந்த ஆா்.அமுதா, உறுப்பினா்கள் பூமணி, அலமேலு, லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் மின் கட்டணம், சொத்துவரி உயா்வை அரசு திரும்பப் பெற வேண்டும், மாதந்தோறும் மின் கட்டணத்தை கணக்கீடு செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும், மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT