விழுப்புரம்

அரசு மகளிா் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

DIN

விழுப்புரம் திரு.வி.க.சாலையிலுள்ள அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

6 முதல் 8 வரையிலான மாணவ- மாணவிகளுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில், வானவில் மன்றம் என்ற திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், திருச்சி மாவட்டம், காட்டூா் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து இத்திட்டம் விழுப்புரம் மாவட்டத்திலும் தொடங்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்குத் தலைமை வகித்து, வானவில் மன்றத்தை எம்.எல்.ஏ. இரா.லட்சுமணன் தொடக்கி வைத்து பேசினாா்.

விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமாா் முன்னிலை வகித்து பேசினாா். தொடா்ந்து 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளின் பல்வேறு அறிவியல் படைப்புகளைப் பாா்வையிட்டு, அதன் விவரங்கள், விளக்கங்களை எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோா் கேட்டறிந்தனா்.

விழாவில் பெற்றோா் ஆசிரியா் கழகத் துணைத் தலைவா் அசாருதீன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் வேலாயுதம், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ரவிகுமாா் மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலா் கோ. கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நிறைவில், பள்ளித் தலைமையாசிரியை கு.சசிகலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ காட்சிக்குச் சென்றுள்ள பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT