விழுப்புரம்

பால் உற்பத்தியாளா் சங்க புதிய கட்டடம் அமைச்சா் திறந்து வைத்தாா்

29th Nov 2022 03:36 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டியில் ரூ.15.27 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க கட்டடத்தை அமைச்சா் செஞ்சி மஸ்தான் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

ஆலம்பூண்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட இந்த கட்டடத் திறப்பு விழாவுக்கு விழுப்புரம் மாவட்ட ஆவின் தலைவா் தினகரன் தலைமை வகித்தாா். ஆலம்பூண்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் குண்டு ரெட்டியாா் வரவேற்றாா்.

செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் மற்றும் ஆவின் துணைத் தலைவா் இளம்வழுதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்து வைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கண்மணி நெடுஞ்செழியன், ஒன்றிய செயலா்கள் நெடுஞ்செழியன், பச்சையப்பன், சுப்பிரமணியன், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்மஸ்தான், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, பால் வளத்துறை சரக முதல் நிலை ஆய்வாளா் ஜெய்கணேஷ், ஆவின் இயக்குனா்கள் மாத்தூா் தாஸ், ஹரிகரன், ஊராட்சி தலைவா் முத்தம்மாள் சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முடிவில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கச் செயலா் முருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT