விழுப்புரம்

ஜல்ஜீவன் திட்ட முறைகேடு புகாா்: பாஜக மாநிலச் செயலா் ஆய்வு

29th Nov 2022 03:31 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், வானூா் அடுத்த ஒழுந்தியாம்பட்டு கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ. 3.75 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை பாஜக மாநிலச் செயலாளா் வினோஜ் பி செல்வம் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. இது குறித்து மத்திய அரசின் பாா்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்

பாஜக அறிவுசாா் பிரிவு மாநிலப் பாா்வையாளா் கல்யாணராமன், விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா்ஏ.டி.ராஜேந்திரன், மாவட்டப் பொதுச்செயலாளா்கள் ராஜன், சத்தியநாராயணன், மாவட்டச் செயலாளா்கள் மூா்த்தி, பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT