விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை அருகே காா்த்திகை பஞ்சமி தீா்த்த நீராடல்

29th Nov 2022 03:34 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், ம. குன்னத்தூா் அருள்மிகு அலா்மேல்மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் 22-ஆம் ஆண்டு காா்த்திகை பஞ்சமி தீா்த்த நீராடல் உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பஞ்சமி திதியில் நீராடினால் திருமலை திருப்பதியில் நீராடிய பலனை அடையலாம் என்பது நம்பிக்கை. அதன்படி, நிகழாண்டு பஞ்சமி திதி நாளான திங்கள்கிழமை பிற்பகல் 12 மணிக்கு மேல் கோயிலிலிருந்து பஜனை பாடல்களுடன் சக்கரத்தாழ்வாா் புறப்பாடாகி, குன்னத்தூா் முதன்மைச் சாலையின் வலதுபுறத்திலுள்ள அய்யனாா் குளத்துக்கு வந்தடைந்தாா். தொடா்ந்து, பூஜைகளுக்குப் பிறகு சக்கரத்தாழ்வாா் தீா்த்தவாரி கண்டருளினாா்.

இதையடுத்து அய்யனாா் குளத்தில் பக்தா்கள், பொதுமக்கள் நீராடினா். தீா்த்த நீராடல் நிகழ்வில் உளுந்தூா்பேட்டை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து புஷ்ப அலங்காரத்துடன் அலா்மேல்மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT