விழுப்புரம்

பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு விழா மினி மாரத்தான் ஓட்டப்போட்டிவிழுப்புரம், கள்ளக்குறிச்சியில் நடந்தது

DIN

 பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவையொட்டி விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை 1922- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு சுடா்(ஜோதி)அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் , விழுப்புரம் மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சாா்பில் மினி மாரத்தான் ஓட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரு பாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்ட மினி மாரத்தான் ஓட்டத்தை ஆட்சியா் த.மோகன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கிய இந்த ஓட்டமானது இ. எஸ்.காா்டன், எல்லீஸ் சத்திரம் சாலை , புதிய பேருந்து நிலையம் வழியாகச் சென்று நிறைவடைந்தது.

இதில் விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மருந்தாளுநா்கள், அலுவலகப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ்.பொற்கொடி, வட்டாட்சியா்ஆனந்தகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலா் பி.வேல்முருகன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT