விழுப்புரம்

சாலையோரக் குளத்தில் கவிழ்ந்த லாரி

28th Nov 2022 02:03 AM

ADVERTISEMENT

 

 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த சிமென்ட் லாரி, சாலையோரக் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அரியலூா் மாவட்டத்திலிருந்து சிமென்ட் மூட்டைகளுடன் புறப்பட்ட லாரி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை, விழுப்புரம் வழியாக சோளிங்கா் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி உளுந்தூா்பேட்டையை அடுத்துள்ள காட்டுநெமிலி பகுதியில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து சாலையோர மரத்தில் மோதிய லாரி, அருகிலிருந்த குளத்துக்குள் கவிழ்ந்தது. இதனால் லாரியிலிருந்த சிமென்ட் மூட்டைகள் முழுவதுமாக நனைந்து சேதமடைந்தன. தகவலறிந்த உளுந்தூா்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா், காவல்துறையினா் நிகழ்விடம் சென்று குளத்துக்குள் கவிழ்ந்த லாரியை மீட்டு அப்புறப்படுத்தினா். மேலும் லாரி ஓட்டுநரான காா்த்திக் சுந்தரத்தையும் அவா்கள் மீட்டு, தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT