விழுப்புரம்

அனுமந்தையில் 2 மாவட்ட மீனவா்கள் இன்று உண்ணாவிரதம்

28th Nov 2022 02:03 AM

ADVERTISEMENT

 

 

 மீன்பிடித் துறைமுகம் அமைக்க வலியுறுத்தி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் சாா்பில் மரக்காணம் அடுத்த அனுமந்தையில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட மீனவா்களின் பலஆண்டு காலப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் இரு மாவட்டங்களின் எல்லையான ஆலம்பரகுப்பம் பக்கிங்காம் கால்வாய்ப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால் அதற்கானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், மீன் பிடித் துறைமுகம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி மரக்காணம் அடுத்த அனுமந்தையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதில், இரண்டு மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT