விழுப்புரம்

தேசிய சட்ட தின விழிப்புணா்வுப் பேரணி

27th Nov 2022 03:22 AM

ADVERTISEMENT

 

விழுப்புரத்தில் தேசிய சட்ட தின விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நவம்பா் 26- ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய சட்ட தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற தேசிய சட்ட தின விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.பூா்ணிமா கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியில் நீதிபதிகள், நடுவா்கள், நீதிமன்றப் பணியாளா்கள், வழக்குரைஞா்கள், காவலா்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சட்டப் பணிகள் ஆணைக் குழு நிா்வாக உதவியாளா்கள், தன்னாா்வலா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

இதேபோல, வானூரை அடுத்துள்ள புளிச்சம்பள்ளம் கிராமத்தில் வானூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், தேசிய சட்ட தின விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இதில், சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் வரலெட்சுமி மற்றும் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT