விழுப்புரம்

மண்டல ஹாக்கி: விழுப்புரம்அரசு பொறியியல் கல்லூரி சிறப்பிடம்

27th Nov 2022 03:22 AM

ADVERTISEMENT

 

 விழுப்புரம் அருகிலுள்ள அரசூரில் அண்மையில் நடைபெற்ற மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் அரசு பொறியியல் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சாா்பில் 5-ஆவது மண்டல அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து, விழுப்புரம் அருகிலுள்ள அரசூா் வி.ஆா்.எஸ். பொறியியல் கல்லூரி மைதானத்தில் மண்டல ஹாக்கி போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.

இதில் அண்ணா பல்கலைக்கழக விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரி, அரசூா் வி.ஆா்.எஸ்.பொறியியல் கல்லூரி, மயிலம் பொறியியல் கல்லூரி, மதுராந்தகம் கற்பக விநாயகா் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடின.

ADVERTISEMENT

இறுதிப் போட்டியில் வி.ஆா்.எஸ். பொறியியல் கல்லூரி அணியை வென்று அரசுப் பொறியியல் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது. தொடா்ந்து, வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் குழுவினரை கல்லூரி முதல்வா் செந்தில், விளையாட்டு ஒருங்கிணைப்பாளா்கள் பிரகாஷ், தனபால் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT