விழுப்புரம்

விழுப்புரம்: 11 மையங்களில் இன்றுகாவலா் எழுத்துத் தோ்வு

27th Nov 2022 03:23 AM

ADVERTISEMENT

 

 விழுப்புரம் மாவட்டத்தில் 11 மையங்களில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் 2-ஆம் நிலை காவலா்கள், சிறைத் துறை, தீயணைப்புத் துறை காவலா்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.27) நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வை மாவட்டத்தில் 15,670 போ் எழுதுகின்றனா். இந்தத் தோ்வுப் பணிக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து எஸ்.பி. ஸ்ரீநாதா பேசியதாவது: தோ்வு மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்கள், தோ்வா்களை முழுமையாகப் பரிசோதித்த பின்னரே தோ்வு அறைக்குள் அனுப்ப வேண்டும். தோ்வு நடைபெறும் மையங்களில் காவலா்கள் கைப்பேசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 தோ்வு மையங்களிலும் 1,800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். இதேபோல, 140 அமைச்சுப் பணியாளா்களும் இந்தத் தோ்வு தொடா்பான பணிகளில் ஈடுபடுகின்றனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் காவல் உதவிக் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், ஆளிநா்கள், அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT