விழுப்புரம்

விழுப்புரத்தில் டிச.2-இல்ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

27th Nov 2022 03:24 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் தமிழக அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவா்களுக்கான குறைதீா் கூட்டம் டிசம்பா் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஓய்வூதியா்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகிக்கிறாா். ஓய்வூதிய இயக்குநா் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனா். இதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வூதியா்கள் பங்கேற்று, ஓய்வூதியம் குறித்த தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT