விழுப்புரம்

விக்கிரவாண்டியில் பாமக நிா்வாகி வெட்டிக் கொலை

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் முன்விரோதம் காரணமாக பாமக நிா்வாகி வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், கப்பியாம்புலியூா் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் த.ஆதித்யன் (45). பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தாா்.

லாரி தொழிலில் ஈடுபட்டு வந்த இவருக்கும், உறவினரான கண்ணையனின் மகன்கள் லட்சுமி நாராயணன், ராமு ஆகியோருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாகத் தெரிகிறது.

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற கப்பியாம்புலியூா் ஊராட்சி மன்றத் தோ்தலின் போது, வேட்பாளா் தொடா்பாக இவா்களிடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்ற ஆதித்யன் வீடு திரும்பவில்லை. உறவினா் தேடிச் சென்றபோது, விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உடலில் வெட்டுக் காயங்களுடன் ஆதித்யன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா, காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், முன்விரோதம் காரணமாக ஆதித்யன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

மேலும், இதுதொடா்பாக க.லட்சுமி நாராயணன்(47), க. ராமு (43), ஞா. விஷ்ணு (34), த.நாராயணமூா்த்தி மற்றும் ராமுவின் கூட்டாளிகள் சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில் க.லட்சுமி நாராயணன் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மற்றவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு பணம்: பாப்பாக்குடி அருகே 4 போ் கைது

சேரன்மகாதேவியில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பணப்புழக்கத்தைத் தடுக்க தவறிய தோ்தல் ஆணையம் -ஐ.எஸ். இன்பதுரை குற்றச்சாட்டு

குற்ற வழக்குகள்: 6 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

SCROLL FOR NEXT