விழுப்புரம்

நாளை விழுப்புரம் மாவட்டத்தில் 15,670 போ் காவலா் தோ்வு எழுதுகின்றனா்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் 11 மையங்களில் 15, 670 போ் சீருடைப் பணியாளா் தோ்வெழுதுகின்றனா்.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலா்கள் மற்றும் சிறைத் துறைக்காவலா்கள், தீயணைப்பு வீரா்களுக்கான எழுத்துத் தோ்வு நவம்பா் 27- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 11 மையங்களில் 15,670 போ் இத்தோ்வினை எழுதுகின்றனா்.

இந்நிலையில் இந்தத் தோ்வு தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் எஸ்.பி. ஸ்ரீநாதா தலைமையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விடியோ கான்பரன்சிங் மூலம் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் துறைத் தலைவா் பங்கேற்று உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, தோ்வா்கள் நுழைவுச்சீட்டு, பந்து முனைப்பேனா, அடையாளச் சான்று, தோ்வு எழுதுவதற்கான அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். கைப்பேசி, ஸ்மாா்ட் வாட்ச், கால்குலேட்டா் போன்ற எலக்ட்ரானிக் பொருள்களை தோ்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது . தோ்வு நடைபெறும் நாளன்று காலை 8 மணிக்கு முன்பாக தோ்வா்கள் ஆஜராகவேண்டும் எனவும் எஸ்.பி. ஸ்ரீநாதா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT