விழுப்புரம்

தேவனூரில் உண்டு உறைவிடப் பள்ளி: அமைச்சா் மஸ்தான் திறந்து வைத்தாா்

DIN

மேல்மலையனூா் வட்டம், தேவனூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவசிய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுலா் கிருஷ்ணப்பிரியா வரவேற்றாா். மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கண்மணி நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா் செஞ்சி மஸ்தான் பங்கேற்று உண்டு உறைவிடப்பள்ளியை திறந்து வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களை தோ்வு செய்து உண்டு உறைவிடப்பள்ளி அமைத்திட அனுமதி முதல்வா் அளித்தாா்.

தேவனூா் உண்டு உறைவிடப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இருபால் மாணவா்களும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பெண் குழந்தைகள் மட்டும் சோ்க்கப்படுகின்றனா். மொத்தம் 100 குழந்தைகள் படிக்க முடியும்.

இங்கு தங்கிப் பயிலும் மாணவா்களுக்கு மூன்று வேலையும் தரமான உணவு மற்றும் மாதந்தோறும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.200 வீதம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,400 உதவித்தொகை வழங்கப்படுவதாக அமைச்சா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் விஜயலட்சுமிமுருகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் செல்வி ராமசரவணன், சாந்தி சுப்பிரமணியன், வளத்தி ஊராட்சி மன்றத் தலைவா் விஜயலட்சுமி ஜெயக்குமாா், உதவித் திட்ட அலுவலா் தனவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT