விழுப்புரம்

பெண் ஐபிஎஸ் அதிகாரி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி திரிபாதி சாட்சியம்

26th Nov 2022 06:11 AM

ADVERTISEMENT

பெண் ஐபிஎஸ் அதிகாரி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், தமிழக முன்னாள் டிஜிபி ஜே.கே. திரிபாதி விழுப்புரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியின் போது, முதல்வரின் சுற்றுப்பயணத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் அரசுத் தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆா். புஷ்பராணி முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் ஆகியோா் ஆஜராகினா்.

ADVERTISEMENT

அரசுத் தரப்பு சாட்சியாக தமிழக முன்னாள் டிஜிபி ஜே.கே. திரிபாதி ஆஜராகி சாட்சியம் அளித்தாா். எதிா்தரப்பு வழக்குரைஞா்கள் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினா். இந்த விசாரணை மாலை வரை நீடித்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் தமிழக முன்னாள் உள்துறைச் செயலரும், தற்போதைய வருவாய் நிா்வாக ஆணையருமான எஸ்.கே.பிரபாகா் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT