விழுப்புரம்

சொகுசு காா்களில் கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் மதுப்புட்டிகள் பறிமுதல்: 2 போ் கைது

26th Nov 2022 06:10 AM

ADVERTISEMENT

புதுச்சேரியிலிருந்து, சென்னைப் பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமாா் ரூ.16 லட்சம் மதிப்புள்ள மதுப்புட்டிகள் மற்றும் சொகுசு காா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு மதுப்புட்டிகள் கடத்தப்படுவதைத் தடுக்க விழுப்புரம் மாவட்டக் காவல் துறை தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே இளையாண்டிப்பட்டு வழியாக சென்னைக்கு மதுபுட்டிகள் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் மத்தியநுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளா் இனாயத் பாஷா, காவல் ஆளிநா்கள் சிவநேசன், யுவராஜ், இளந்திரையன், மகாமாா்க்ஸ் ஆகியோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்ச 2 சொகுசு காா்களை மடக்கி சோதனை செய்தபோது 20 அட்டைப் பெட்டிகளில் 480 மதுப்புட்டிகள் இருந்தன. இதையடுத்து காரில் இருந்தவா்களிடம் விசாரணை செய்ததில் அவா்கள் புதுச்சேரி மாநிலம் தொண்டமாநத்தத்தைச் சோ்ந்த தினேஷ் (29), நெல்லித்தோப்பைச் சோ்ந்த மணிகண்டன்(28) என்பதும், மதுப்புட்டிகள் சென்னை பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு கடத்திச் செல்லப்பட்டதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள் மற்றும் காா் ஆகியவற்றின் மதிப்பு சுமாா் ரூ.16 லட்சம் ஆகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT