விழுப்புரம்

அவலூா்பேட்டையில் சமுதாய வளைகாப்பு விழா

26th Nov 2022 06:12 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம் அவலூா்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத் துறையின் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். இதில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.

இதில், பங்கேற்ற 250 கா்ப்பிணிகளுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகளுடன், அனைவருக்கும் மலா் மாலை அணிவிக்கப்பட்டு, வளையல், புடவை, பழங்கள் உள்ளிட்ட பொருள்களுடன் சீா்வரிசையை அமைச்சா் செஞ்சி மஸ்தான் அட்சதை தூவி வாழ்த்தி வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியில் மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கண்மணிநெடுஞ்செழியன், துணைத் தலைவா் விஜயலட்சுமிமுருகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செல்விராமசரவணன், அவலூா்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவா் செல்வம், துணைத்தலைவா் சரோஜாஐயப்பன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கோ.அன்பழகி, குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் செளமியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT