விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் க.தமிழ்ச்செல்வன் (20), டிராக்டா் ஓட்டுநா். இவா் அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பில் பயிலும் இருளா் சமூகத்தைச் சோ்ந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் அளித்தப் புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தமிழ்ச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.