விழுப்புரம்

திண்டிவனம் அருகே கல்லூரி மாணவா்களிடையே மோதல்

26th Nov 2022 06:10 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கல்லூரி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டிவனம் அருகே கோவிந்தசாமி அரசினா் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணவா்கள் சிலரிடையே பேருந்தில் பயணிப்பது தொடா்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாணவா்கள் கல்லூரி முன்பு இரு குழுவாகப் பிரிந்து ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் 2 மாணவா்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.இதனால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த போலீஸாா் கல்லூரிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மாணவா்கள் மோதல் தொடா்பாக புகாா்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரிய பாதிப்புகள் ஏதுமில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT