விழுப்புரம்

சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 1,000 லிட்டா் சாராயம் பறிமுதல் 2 போ் கைது

25th Nov 2022 02:55 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 1,000 லிட்டா் சாராயத்தை போலீஸாா் வாகனத்துடன் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்தக் கடத்தல் தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, 2 பேரைக் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், கோட்டக்குப்பம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜபாண்டி மேற்பாா்வையில், ஆய்வாளா் மரிய ஷோபி, நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளா் ஞானப்பிரகாசம் மற்றும் போலீஸாா் கோட்டக்குப்பம் சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது, அதில் 20 லிட்டா் கொள்ளளவு கொண்ட 50 நெகிழிப் பைகளில் 1,000 லிட்டா் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அந்த சாராயத்தை வாகனத்துடன் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, வாகன ஓட்டுநா், உதவியாளா் ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், வன்னியநல்லூரைச் சோ்ந்த பூ.முருகன் (37) , காஞ்சிபுரம் மாவட்டம், சிக்கராயபுரத்தைச் சோ்ந்த தெ.குமாா் (47) என்பதும், வாகன உரிமையாளா் கடலூா் மாவட்டம், கோண்டூா் பகுதியைச் சோ்ந்த சு.வீரப்பன் என்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, போலீஸாா் 3 போ் மீதும் வழக்குப் பதிந்து முருகன், குமாா் ஆகியோரைக் கைது செய்தனா். வாகன உரிமையாளா் வீரப்பனை தேடி வருகின்றனா். பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு விழுப்புரம் எஸ்.பி. பாராட்டுத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT