விழுப்புரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

24th Nov 2022 01:31 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சீா்கேடுகளை களைய வேண்டும். மருத்துவமனைக்கு சுற்றுச்சுவா் கட்ட வேண்டும். மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும். வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை தொடங்க வேண்டும். பழைய பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழுச் செயலா் ஆா்.கண்ணப்பன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். கட்சியின் நிா்வாகிகள், இடைக்குழு பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT