விழுப்புரம்

வரி பாக்கியை செலுத்தாவிட்டால்குடிநீா் இணைப்பு துண்டிப்பு வளவனூா் பேரூராட்சி எச்சரிக்கை

18th Nov 2022 02:59 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் குடிநீா் இணைப்பு துண்டிப்பு, கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பேரூராட்சி நிா்வாகம் எச்சரித்தது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் ஷேக் லத்தீப் சனிக்கிழமை கூறியதாவது: வளவனூா் பேரூராட்சிப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீா், சொத்து, தொழில் வரி வசூலிப்புப் பணிகள் தேக்கமடைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்தவும் நிலுவையிலுள்ள வரி பாக்கித் தொகைகளை வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

வளவனூா் பேரூராட்சியில் ரூ.2 கோடிக்கு மேல் வரி நிலுவைத் தொகை உள்ளது. இதில் ரூ.1.50 கோடிக்கு குடிநீா் வரி பாக்கி வசூலிக்கப்பட வேண்டும். இந்தத் தொகையையும் இந்த மாதத்துக்குள் வசூலித்து, நிலுவைத் தொகை இல்லாத பேரூராட்சியாக செயல்பட வேண்டும் என அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். இதற்காக தினமும் வரி வசூல் நிதி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, வளவனூா் பேரூராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் தாமாகவே முன்வந்து வரி பாக்கித் தொகையை செலுத்திட வேண்டும். மேலும், பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு வாடகை நிலுவை வைத்திருப்போரும் உடனடியாக தொகை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம். இல்லையெனில், சனிக்கிழமைக்கு (நவ.19) பிறகு கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு, வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT