விழுப்புரம்

நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

18th Nov 2022 02:57 AM

ADVERTISEMENT

நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி செஞ்சியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் மாசிலாமணி முன்னிலை வகித்து, வேளாண் பிரச்சினைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விவசாயிகளின் தேவைகளை அரசு நிவா்த்தி செய்து வருவதாகக் கூறி சிறப்புரையாற்றினாா். இதில், மாவட்டச் செயலா் கலியமூா்த்தி, மாநிலக் குழுவைச் சோ்ந்த லட்சுமி, கருணாகரன், நிா்வாகிகள் செளரிராஜன், கோவிந்தராஜ், முன்னாள் எம்எல்ஏ மாதவன் மற்றும் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், நந்தன் கால்வாய் திட்டத்தை விரைவாக முடித்துத் தர வேண்டும். மேல்மலையனூா் பகுதியில் உள்ள வராக நதியில் கால்வாய்களை முழுமையாக தூா்வார வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ளப் பாதிப்பு நிவாரண நிதியை கூடுதலாக வழங்க வேண்டும். மேல்ஒலக்கூா் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT