விழுப்புரம்

தொழில் பழகுநா் பயிற்சி:இன்று மாணவா் சோ்க்கை

14th Nov 2022 12:29 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அரசுத் தொழில்பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநா் பயிற்சிக்கான மாணவா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (நவ.14) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்திருப்பதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதமரின் தொழில்பழகுநா் பயிற்சியின் கீழ், மாவட்ட அளவிலான தொழில்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் உளுந்தூா்பேட்டை அரசுத் தொழில்பயிற்சி நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாமில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தொழில்பழகுநா் பயிற்சிக்கு 500-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்பவுள்ளனா்.

ADVERTISEMENT

தொழில்சாலைகளில் நேரடியாக ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழில்பழகுநா் பயிற்சி பெற்று, தேசியத் தொழில்பழகுநா் பயிற்சிச் சான்றிதழைப் பெறலாம். மாதாந்திர உதவித் தொகையாக ரூ.8500 முதல் ரூ.10,000 வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி (தொலைபேசி எண்: 04146 - 294989, 9629666279, 9791608373) என்ற முகவரியைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT