விழுப்புரம்

செஞ்சி பேரூராட்சி மன்றக் கூட்டம்

1st Nov 2022 04:39 AM

ADVERTISEMENT

செஞ்சி பேரூராட்சி மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைவா் மொக்தியாா் மஸ்தான் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். செஞ்சி பேரூராட்சி எல்லைக்குள்பட்ட செஞ்சி பிரதான சாலையில் இருந்து செஞ்சிக்கோட்டை நுழைவு வாயில் வரையிலும், அங்கிருந்து வீரஆஞ்சநேயா் கோயில் வரையிலும், பட்டாபிராமா் கோயில் வரையிலும் தாா்ச்சாலை அமைத்தல், பேவா்பிளாக் சாலை, வடிகால் வசதி, எல்.இ.டி. மின் விளக்குகள் ஆகியவை அமைக்க ரூ 3.30 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுலாத் துறை இயக்குநருக்கு கருத்துரு அளிக்கப்பட்டது.

செஞ்சி கோட்டைப் பகுதியில் படகு சவாரி, பேட்டரி காா், கம்பி வழிபாதை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மன்றத்தின் பாா்வைக்கு சமா்ப்பிக்கப்பட்டது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT