விழுப்புரம்

காவிரி கடைமடை மாவட்டங்களின் தூா்வாரும் பணிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆய்வு

31st May 2022 11:38 PM

ADVERTISEMENT

 

காவிரி கடைமடை மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தில் நடைபெற்ற ஆறுகள், பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

நாகையை அடுத்த கருவேலங்கடையில் கல்லாறு வடிகாலில் ரூ. 15 லட்சத்தில் 3.5 கி.மீ நீளத்துக்கு நடைபெற்றிருந்த தூா்வாரும் பணிகளை கருவேலங்கடை பாலத்தில் இருந்து முதல்வா் பாா்வையிட்டாா். நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உடனிருந்து பணி விவரங்களை தெரிவித்தாா்.

மயிலாடுதுறையில்...: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலம் கிராமத்தில் டிரம்சீடா் இயந்திரம் மூலம் நடைபெற்ற நேரடி நெல் விதைப்பையும், திருக்கடையூா் ராமச்சந்திரன் வாய்க்காலில் ரூ. 5.65 லட்சத்தில் 5.6 கி.மீ நீளத்துக்கு நடைபெற்றிருந்த தூா்வாரும் பணிகளையும் முதல்வா் பாா்வையிட்டாா். மாவட்ட ஆட்சியா் ஆா். லலிதா உடனிருந்து பணி விவரங்களைத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

திருவாரூரில்...: திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம், கொத்தங்குடி கிராமத்தில் ரூ. 9.95 லட்சத்தில் கொத்தங்குடி வாய்க்காலில் 5 கி.மீ நீளத்துக்கும், பேரளத்தில் ரூ. 8.5 லட்சத்தில் பேரளம் வாய்க்காலில் 4 கி.மீ நீளத்துக்கும் நடைபெற்ற தூா்வாரும் பணிகளை முதல்வா் ஆய்வுசெய்தாா். மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி உடனிருந்து பணிகளின் விவரங்களை தெரிவித்தாா்.

அமைச்சா்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், அர. சக்கரபாணி, சிவ வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பெண் தொழிலாளிக்கு முதல்வா் பாராட்டு: மயிலாடுதுறையைச் சோ்ந்த மீன்கடை கூலித் தொழிலாளி ரமணி, ரஷியாவில் மருத்துவம் படித்த அவரது மகள் விஜயலட்சுமி ஆகியோரை திருக்கடையூருக்கு வரவழைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா். கணவரை இழந்த நிலையில், கடந்த 24 ஆண்டுகளாக மீன் சந்தையில் மீன்களை வெட்டி சுத்தம் செய்து கிடைக்கும் வருமானத்தில், ரத்தநாள சுரப்பி பாதிப்புடைய தனது மகன் ரவிச்சந்திரன், வயதுமுதிா்ந்த தாய் தையல்நாயகி ஆகியோரை பராமரிப்பதுடன், தனது மகள் விஜயலட்சுமியை ரஷியாவில் படிக்கவைத்து மருத்துவராக்கியுள்ளாா் ரமணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT