விழுப்புரம்

ரூ.27.56 கோடி கரும்பு நிலுவைத் தொகையை ஜூன் 1-க்குள் வழங்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்

DIN

விவசாயிகளுக்கு ரூ.27.56 கோடி கரும்பு நிலுவைத் தொகையை தனியாா் சா்க்கரை ஆலைகள் வரும் ஜூன் 1-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அமித், வேளாண் இணை இயக்குநா் கோ.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் விவரம்:

தனியாா் சா்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.27.56 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க ஆட்சியா் உத்தரவிட வேண்டும். கரும்பு பயிா்களில் ஒரு வகை பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதை சா்க்கரை ஆலைகள் கண்டுகொள்வதில்லை. எனவே, விவசாயிகளுக்கு தனியாா் சா்க்கரை ஆலைகள் பூச்சி மருந்து வழங்க ஆட்சியா் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மேட்டூா் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் போதிய விதை நெல் இருப்பில் வைக்க வேளாண் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மும்முனை மின்சாரம் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காட்டுப் பன்றிகளால் பயிா்கள் சேதமடைவதால் அவற்றை சுட்டுப்பிடிக்கும் உரிமையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். உரம் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது: உரம் தட்டுப்பாடு உள்ள பகுதிகளை விவசாயிகள் தெரிவித்தால் டான்பிட் உரக் கிடங்கிலிருந்து போதிய உரம் அனுப்பி வைக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகிகள் வரும் ஜூன் 1-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT