விழுப்புரம்

இருளா் பாதுகாப்புச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பி.வி.ரமேஷ் தலைமை வகித்தாா். புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்புச் செயலா் சுகுமாறன், பேராசிரியா் பிரபா கல்விமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ஏவி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், திருக்கோவிலூா் காவல் நிலைய போலீஸாரால் 4 இருளா் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகள் கடந்தும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாதது, இந்த வழக்கின் முதல் எதிரியான காவல் ஆய்வாளா் சீனிவாசன் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து தப்பியோடியது உள்பட 2022-ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்டுள்ள இருளா்கள் தொடா்பான 16 வழக்குகளையும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும், பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதில் தொடா்புடைய இருளா்களை உடனடியாக விடுவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பொய் வழக்குப் பதிவு செய்த காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT