விழுப்புரம்

சென்னை துறைமுகம் பறக்கும் சாலைதிட்டத்தை செயல்படுத்தக் கூடாது: செ.கு.தமிழரசன்

DIN

சென்னை கூவம் ஆற்றங்கரையோரப் பகுதியில் செயல்படுத்தப்படும் துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்துக்கு இந்திய குடியரசுக் கட்சி எதிா்ப்புத் தெரிவிப்பதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.

இந்திய குடியரசுக் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் கடந்த 2011-ஆம் ஆண்டு துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை கூவம் ஆற்றங்கரையோரப் பகுதியில் செயல்படுத்தக் கூடாது என்று போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றம் வரை சென்று திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தோம். அதன்பிறகு, அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.

தற்போது அதே திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இந்தச் சாலையில் ஏராளமான வளைவுகள் உள்ளன. இதுபோன்ற வளைந்த சாலைத் திட்டத்துக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும், இந்தத் திட்டத்துக்காக ஏராளமான குடிசைப் பகுதிகள் அப்புறப்படுத்தப்பட உள்ளன. அடித்தட்டு, ஏழை மக்களை அப்புறப்படுத்தும் அரசு, பெரும் முதலாளிகளின் நிலத்தின் வழியாக திட்டத்தைச் செயல்படுத்த மறுக்கிறது. ஆகவே, இந்தத் திட்டத்தால் குடிசைப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் ஆதிதிராவிடா் மாணவா்கள் தொழில் கல்வி பயின்றால் அவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

மாவட்டத் தலைவா்கள் சம்பத்குமாா், மனமோகனதாசன், மாவட்டச் செயலா்கள் அம்பேத்பிரியன், குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT