விழுப்புரம்

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் செயல்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியா்கள் ஓய்வு பெறும் வயதை 62-ஆக உயா்ந்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மணிகண்ணன் தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகிகள் நாகராஜ், கோபால், சித்ரா, பாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா் தனஞ்செழியன் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் அபராஜிதன் சிறப்புரையாற்றினாா்.

மாவட்டச் செயலா் மலா், நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, ராஜேந்திரன், ராஜாராம், ஜெயக்குமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். மாவட்டப் பொருளாளா் தேவதாஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT