விழுப்புரம்

விழுப்புரத்தில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

25th May 2022 11:33 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறும். இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தோ்ச்சி பெற்றவா்கள், கலை, அறிவியல், வணிகவியல் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், செவிலியா் படிப்பு முடித்தவா்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா்.

இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சாா்ந்த படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பெண்கள் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையதள முகவரியில் தங்களது மனுக்களை பதிவு செய்து முகாமில் பங்கேற்கலாம். முகாமுக்கு வரும்போது கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, சுய விவரக் குறிப்பு ஆகியவற்றுடன் வர வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரம் அறிய 04146-226417 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT