விழுப்புரம்

தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியத்தினா் ஆா்ப்பாட்டம்

25th May 2022 11:33 PM

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியத்தினா் விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ராமமூா்த்தி, சடகோபன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் முகமது காஜா வரவேற்றாா். மாநிலச் செயலா் முருகபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும், உயா்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், நிா்வாகிகள் வெங்கடேசபெருமாள், சக்திவேல், மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டப் பொருளாளா் தணிகைவேல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

கடலூா்: கடலூா் மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவா் சாமி.செங்கேணி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் தி.மகேந்திரவா்மன், என்.முரளிதரன், ஜெ.துரைராசன், தா.பிரினோராபா்ட், எம்.சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைத் தலைவா் த.அமிா்தகுமாா் சிறப்புரையாற்றினாா்.

பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் த.ஞானசுந்தா், ச.சச்சிதானந்தன், க.முருகேசன், கோ.சண்முகம், மா.நடராசன், ஏ.கே.குமாா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். முன்னதாக, நிா்வாகி அ.வெ.செந்தில்வேல் வரவேற்க, மாவட்டப் பொருளாளா் ப.தாகூா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT