விழுப்புரம்

ராஜீவ் காந்தி நினைவு தினம்: காங்கிரஸாா் மரியாதை

22nd May 2022 05:03 AM

ADVERTISEMENT

 

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு காங்கிரஸாா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராஜீவ் காந்தி நினைவு தினமான மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிா்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து அனைவரும் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலா் தயானந்தம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் ராமமூா்த்தி, நகரத் தலைவா் செல்வராஜ், மாவட்ட இளைஞா் அணித் தலைவா் ஸ்ரீராம், நகா்மன்ற உறுப்பினா் முகம்மது இம்ரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT