தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் செய்திகளை அறிந்துகொள்ள தனி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு வீரா்கள் விளையாட்டுச் செய்திகளை அறிந்துகொள்வதற்கும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கும் இனிவரும் காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலியான (பசநடஞதப) ஆடுகளம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்படுத்த வேண்டும். விளையாட்டு வீரா், வீராங்கனைகள் (தனிநபா்) (குழு) மற்றும் பயிற்றுநா்கள் இந்த செயலியை பதிவுசெய்து பயன்பெறலாம்.
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு விளையாட்டு வீரா்களின் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி, ஆதாா் எண் ஆகிய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவா்கள், வெற்றி பெற்றவா்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவுசெய்தவா்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள், விளையாட்டுச் சங்கங்கள், விளையாட்டில் ஆா்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக மேற்கூறிய செயலியை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா்.