திண்டிவனம் அருகே காா் மோதியதில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு அருகே உள்ள பந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவதாஸ் (65). இவா் சனிக்கிழமை இரவு திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். கேணிப்பட்டு பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த காா் பைக் மீது மோதியது. இதில் தவறி விழுந்த தேவதாஸ் மீது பின்னால் வந்த மற்றொரு காா் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.